
மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அறுந்து கிடந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஊர்வலத்தின்போது சகினாகா பகுதியில் அறுந்து தொங்கிய மின்சார கம்பி மீது சிலை ஒன்று உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார்.
மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களை சில உள்ளூர்வாசிகள் மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் ஒருவர் நகராட்சியால் நடத்தப்படும் செவன் ஹில்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆனால் அதில் பினு சுகுமாரன் குமரன் (36) பலியாகிவிட்டதாக செவன் ஹில்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் அறிவித்ததாக நகராட்சி அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அதேசமயம் பாரமௌண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபான்ஷு காமத் (20), துஷார் குப்தா (20), தர்மராஜ் குப்தா (49), கரண் கனோஜியா (14) மற்றும் அனுஷ் குப்தா (6) ஆகிய ஐந்து பேரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.