ஹரியாணா வெள்ளத்தில் மூழ்கிய 300 மாருதி சுசூகி கார்கள்! என்னவாகும்?

300 மாருதி சுசூகி கார்கள் ஹரியாணா வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், அவற்றின் கதி என்னவாகும் என்பது பற்றி..
கார்கள்
கார்கள்
Published on
Updated on
1 min read

பொதுவாக மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும்போது, கார்கள் வெள்ளத்தில் மூழ்குவது சாதாரண விஷயம் என்றாலும், ஒரே இடத்தில் 300 புதிய கார்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பது சாதாரணம் அல்ல.

ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜ்ர் மாவட்டம் பஹதுர்கார் பகுதியில் கார்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.

மாருதி சுசூகியின் பல புதிய கார்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடப்பது விடியோவில் பதிவாகியிருக்கிறது.

ஏஎன்ஐயில் வெளியிடப்பட்டிருக்கும் விடியோவில், மாருதி சுசூகியின் கார் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 300 புதிய வகை கார்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல, கடந்த ஏழு நாள்களாக இவை தண்ணீரில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கிருந்து அவற்றை வெளியே எடுத்து வருவதும் இயலாத காரியமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கிருக்கும் கார்களில் பல லட்சம் மதிப்புள்ள ஆல்டோ கே10, வாகனார், பிரெஸ்ஸா, இன்விக்டோ உள்ளிட்ட கார்களும் அடங்கும். வெள்ளம் சூழ்ந்ததன் காரணமாக சில கார்களில் ஏர்பேக்குகள் திறக்கப்பட்டிருப்பதும், சில கார்களில், ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருக்கும் ஜன்னல் கண்ணாடிகள் நீக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த கார்களின் போன்னெட் முழுக்க தண்ணீர் நிரம்பியிருக்கிறது.

இது பற்றி அருகில் இருக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், இந்த கார்கள் மாருதி சுசூகி கார் கடை உரிமையாளருக்குச் சொந்தமானது. வெள்ளம் சூழ ஆரம்பித்ததும், கிடங்கின் பாதுகாவலருக்கு தகவல் கொடுத்தோம். ஆனால், நடவடிக்கை எடுக்கும் முன்பே, வெள்ளம் கார்களை சூழ்ந்துவிட்டது. கார்களிலிருந்து அலாரம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

இந்த கார்கள் மூழ்கியதால் ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு என்று இதுவரை மதிப்பிடப்படவில்லை என்றும், இந்த கார்களை ஓடும் நிலைக்குக் கொண்டு வருவது பெரும்பாலும் சாத்தியமில்லாதது என்றும் கூறப்படுகிறது.

ஏன் என்றால், கார்களின் என்ஜின்களுக்குள் தண்ணீர் செல்லும் அளவுக்கு வெள்ளம் நின்றிருக்கிறது. என்ஜின்களுக்குள் தண்ணீர் சென்று இத்தனை நாள்கள் ஆன பிறகு, அவற்றால் இயங்க முடியாத நிலை ஏற்படும் என்கிறார்கள்.

கடந்த ஒரு சில நாள்களாக, ஹரியாணாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்து தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல தொழிற்சாலைகளுக்குள் 4 முதல் 5 அடிக்கு வெள்ளம் சூழ்ந்திருப்பதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Summary

As 300 Maruti Suzuki cars are submerged in the Haryana floods, what will happen to them?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com