
உத்தரகண்ட் மாநிலத்தின் குப்த்காசியில் மேகவெடிப்பால் கனமழை பொழிந்த நிலையில், மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகளில் 9 பேர் மாயமானதாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மாநில பேரிடர் மீட்புப்படை, உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மண்ணில் புதையுண்ட மக்களை தேடிக் கண்டுபிடிக்க மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் தரைமட்டமான கட்டடங்கள் கட்டுமானங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.