
புது தில்லி: பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் தலைமையிலான மகா (மகாகத்பந்தன்) கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சற்று சிக்கலாகியிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விஐபி கட்சிகள் இருக்கும் நிலையில், தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்சா மற்றும் எல்ஜேபியின் பராஸ் கட்சியும் இணைந்துள்ளன.
பிகார் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 243 தொகுதிகளை, இந்த எட்டு கட்சிகள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பதால், முக்கிய கட்சிகள் தங்களது சில தொகுதிகளை விட்டுக்கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இரண்டு கட்சிகள் கூட்டணியில் இணைவதால், எங்களது தொகுதிகளை விட்டுக்கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதேவேளையில், பிகாரில் 70 தொகுதிகளுக்கும் குறைவாக போட்டியிட முடியாது என்ற நிலைப்பாட்டையும் காங்கிரஸ் உறுதி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
விஐபி கட்சியோ 60 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவியைக் கோரும் நிலையில், சிபிஐ-எம்எல் எட்சி 40 தொகுதிகளைக் கேட்டிருக்கிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம், 150 தொகுதிகளுக்குக் குறைவாகப் போட்டியிட முடியாது என்று திட்டவட்டமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
2020 தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 144 தொகுதிகளில் போட்டியிட்டு 75 தொகுதிகளிலும், காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க... ஜிஎஸ்டி மாற்றம்: ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலை நிலவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.