
தலைநகர் தில்லி முழுவதும் மருத்துவமனைகளில், சளி, இருமல், காய்ச்சலுடன் நாள்தோறும் வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் முழுவதும் புது தில்லியில் மழைப் பொழிவு அதிகமாக இருந்து வந்துள்ளது, புது தில்லி மட்டுமல்லாமல் வட மாநிலங்கள் பெரும்பாலம் கனமழை மற்றும் வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, தில்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இது குறித்து அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுவது என்னவென்றால், பெரும்பாலான நோயாளிகள் கடுமையான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி, உடல் பலவீனம் போன்றவற்றுடன் வருகிறார்கள்.
எப்போதும் இல்லாத வகையில், இந்த மழைக்காலத்தில், சளி, மற்றும் காய்ச்சல் குணமடைய வழக்கமான காலத்தைக் காட்டிலும் சற்று அதிக நாள்கள் எடுத்துக் கொள்கிறது.
சிலர் 3-5 நாள்களில் குணமடைகிறார்கள். பெரும்பாலானோருக்கு 7 நாள்கள் வரை ஆகிறது. சிலருக்கு சளி, காய்ச்சல் குணமடைந்தாலும் இருமல் மற்றும் பலவீனம் சரியாக அதிக நாள்கள் ஆவதாகவும் கூறுப்படுகிறது.
பருவமழைக் காலங்களில் இதுபோன்று ஏற்படுவது வழக்கமானதுதான் என்பதால், பெரும்பாலும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
அண்மையில் பரவும் காய்ச்சல் மிகவும் மோசமான உடல்நிலைப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், இதுபோன்ற பருவக்கால நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசிகளை மக்கள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதனால் உடல்நிலை மோசமாக பாதிக்கப்படுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் யோசனை தெரிவிக்கிறார்கள்.
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த காய்ச்சல் இதுபோன்ற காய்ச்சல் பாதிப்பு கடுமையாக அதிகரித்திருப்பதகாவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க... ஹரியாணா வெள்ளத்தில் மூழ்கிய 300 மாருதி சுசூகி கார்கள்! என்னவாகும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.