
ஜம்மு - காஷ்மீரில் தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு ட்ரோன்கள் மூலம் உணவு, குடிநீர், மருந்துப் பொருள்களை ராணுவத்தினர் விநியோகம் செய்தனர்.
வெள்ளத்தில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால், தொடர்புகொள்ள முடியாத குர்ஜ் மாகாணத்துக்குட்பட்ட கிராமங்களுக்கு ட்ரோன்கள் மூலம் ராணுவத்தினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். இது தொடர்பான விடியோக்களை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இந்திய ராணுவம் பகிர்ந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், மலைப் பிரதேசங்களில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன.
ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சில்லா கிராமத்தில் தொடர் மழையால் சாலைகள் சேதடைந்துள்ளன. மலைப்பிரதேசமான இப்பகுதியைத் தொடர்புகொள்ளும் வழியில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
உஜ் நதிக்கரையில் சில்லா கிராமம் அமைந்துள்ளதால், அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கிராமத்தில் உள்ள மக்களும் வெளியேற முடியாத நிலை உள்ளது.
இதனால், வெளியுலகத் தொடர்பின்றி அக்கிராமத்தில் உள்ள மக்கள் தவித்து வருகின்றனர். எனினும் அவர்களுக்கு ட்ரோன்கள் மூலம் 150 கிலோ எடையுடைய உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ராணுவத்தினர் இன்று அனுப்பிவைத்தனர்.
இதையும் படிக்க | ஜம்மு - காஷ்மீர் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை: 2 பேர் சுட்டுக்கொலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.