
கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம், நீதிமன்ற வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை மின்னஞ்சலில் மிரட்டல் வந்துள்ளது. மாவட்ட நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடிக்கு இந்த மிரட்டல் வந்திருக்கிறது.
இதையடுத்து வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படை, மோப்ப நாய் படையின் குழுக்கள் நீதிமன்ற வளாகம் மற்றும் கிளிஃப் ஹவுஸ் ஆகிய இரு இடங்களிலும் முழுமையான சோதனைகளை மேற்கொண்டன.
இருப்பினும், இந்த சோதனையில் எந்த வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை, பின்னர் அது ஒரு புரளி என்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர். தமிழக அரசியலைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட மின்னஞ்சலை அனுப்பியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சற்று பரபரப்பு நிலவியது. போலீஸ் தரப்பில் கூறுகையில், கிளிஃப் ஹவுஸ், ராஜ் பவன், விமான நிலையம் மற்றும் நீதிமன்றங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து, இந்த ஆண்டு இதுபோன்ற சுமார் 28 போலி மின்னஞ்சல்கள் வந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.