
புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக இருந்த சாமிநாதன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2015 டிசம்பர் முதல் 2023 செப்டம்பர் வரை சுமார் 8 ஆண்டுகள் புதுச்சேரி பாஜக தலைவராக இருந்த இவர், முன்னாள் பாஜக எம்எல்ஏவும் ஆவார்.
பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் கட்சி செயல்பாடுகளில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்தார்.
இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள சாமிநாதன், தனது அறிக்கையில்,
"கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் இருந்த பாரதிய ஜனதா கட்சியிலிருந்து இன்று முதல் முழுமையாக விலகிக் கொள்கிறேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நான் பாரதிய ஜனதா கட்சியில் பல பொறுப்புகளை வகித்துள்ளேன். நான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தபோது எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நிர்வாகிகளுக்கும், எனக்கு பதவி அளித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன், புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன், ஊழலற்ற நேர்மையான புதியவர்களை கொண்டு புதிய அரசு அமைய முழுவீச்சில் பாடுபடுவேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... இன்னும் கொஞ்சம் இறக்கி வையுங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.