
பிஜு ஜனதா தளம் கட்சியைத் தொடர்ந்து, பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்சியும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தோ்தல் நாளை (செப் 9) நடைபெறவுள்ள நிலையில், தேர்தலை புறக்கணிப்பதாக பாரத ராஷ்டிர சமிதி கட்சி அறிவித்துள்ளது.
நோட்டா இருந்திருந்தால் அதற்கு வாக்களித்திருப்போம் என்றும் அது இல்லாததால் புறக்கணிக்கிறோம் என்றும் பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்.பி. சஸ்மித் பத்ரா அறிவித்திருந்த நிலையில், தற்போது பி.ஆர்.எஸ். கட்சியும் புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
பிஜு ஜனதா தளம் கட்சிக்கு மாநிலங்களவையில் 7 உறுப்பினர்கள் உள்ளனர். பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு மாநிலங்களவையில் 4 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக இரு கட்சிகளின் அறிவிப்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவர் பதவியை வகித்து வந்த ஜகதீப் தன்கர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த ஜூலை 21-ஆம் தேதி திடீரென ராஜிநாமா செய்தார்.
மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இத்தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் (67), எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் பி. சுதா்சன் ரெட்டி (79) ஆகியோர் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. எம்.பி.க்கள் பலத்தின் அடிப்படையில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கே வெற்றி வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க: ரஜினியுடன் இணைந்து நடிப்பதை உறுதிப்படுத்திய கமல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.