
தில்லியில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும் (67) எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் பி. சுதர்சன் ரெட்டியும் (79) போட்டியிட்டனர்.
காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், தற்போது வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.
மொத்தமாக 782 வாக்குகள் பதிவாக வேண்டிய நிலையில், 13 வாக்குகள் மட்டுமே செலுத்தப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது.
543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் ஒரு உறுப்பினர் இடம் காலியாக உள்ளது. 233 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது. வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்சம் 392 வாக்குகள் தேவை.
பிஜு ஜனதா தளம் மற்றும் பாரத ராஷ்டிர சமிதி கட்சிகளின் எம்.பி.க்கள் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணித்திருந்தனர். இதனால், 769 உறுப்பினர்கள் வரை வாக்களித்துள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க | மல்லிகை மட்டுமல்ல, ரசகுல்லா முதல் தேயிலை வரை! ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டவை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.