மல்லிகை மட்டுமல்ல, ரசகுல்லா முதல் தேயிலை வரை! ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டவை!

மல்லிகை மட்டுமல்ல, ரசகுல்லா முதல் தேயிலை வரை ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட பொருள்களின் பட்டியல் நீள்கிறது.
sweet photo
இந்திய இனிப்பு வகைகள்Center-Center-Bangalore
Published on
Updated on
1 min read

அரைமுழம் மல்லிகைப் பூவை கைப்பையில் எடுத்துச் சென்றதற்காக, ஆஸ்திரேலியாவில், ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தியதாக நடிகை நவ்யா நாயர் தெரிவித்திருந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட பொருள்களின் பட்டியல் வெளியாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் ஓணம் பண்டிகைக் கொண்டாட, மலையாளிகள் அமைப்பு விடுத்த அழைப்பை ஏற்று, இந்தியாவிலிருந்து மெல்போர்ன் விமானம் நிலையம் சென்ற நவ்யா நாயர், அவருடைய கைப்பையில் மல்லிகைப் பூவை வைத்திருந்தக் குற்றத்துக்காக ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அவரே தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட நிலையில், ஆஸ்திரேலியாவின், பயிர்ப் பாதுகாப்புக் கொள்கை, மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுவதாகவும், அவர்களது பயிர்ப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்று கருதும் எந்தவொரு பொருளையும் அந்நாட்டுக்குள் கொண்டு செல்வது குற்றம் என்றும் தெரிய வந்துள்ளது.

ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பொருள்களை ஆஸ்திரேலியாவுக்குள் வெளிநாட்டினர் கொண்டு செல்லக் கூடாது.

அவற்றின் பட்டியலில் இடம்பெற்றுள்ள, ஆனால், மக்கள் தெரியாமல் கொண்டு செல்ல வாய்ப்புள்ள பொருள்களை மட்டும் தெரிந்துகொள்வது அவசியம்.

அந்த வகையில், காய்கறிகள், பழங்கள்,

மூலிகைகள், இலைகள், மிளகாய், பச்சை கொட்டைகள், விதைகள்

காய்ந்த அல்லது மலர்ந்த மலர்கள்

பால் பொருள்கள்

பர்ஃபி, ரச மலாய், ரசகுல்லா, பேடா, குலாப் ஜாமன், மைசூர் பாக்கு, சோன் பப்படி போன்ற இந்தியாவில் தயாரிக்கப்படும் இனிப்புகளையும் கொண்டு செல்லக் கூடாது.

அரிசி

தேயிலை

வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு

தேன்

விலங்குகளுக்கான உணவுகள்

இறகுகள், எலும்புகள், தோல் பொருள்கள்

இலை, விலங்குகளின் கொழுப்புகளால் செய்யப்பட்ட பாரம்பரிய மருந்துகள்

கப்பல் மற்றும் விமானத்தில் கொடுத்த உணவுகள்

மேலும், இறகுகளால் செய்யப்பட்ட ஆடைகள், தலையணை போன்றவற்றையும் கொண்டு செல்வதற்கு தடை செய்யப்பட்டவை.

Summary

It has also been revealed that it is a crime to bring into the country any item that is considered to be a threat to crop safety.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com