குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு விழாவில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வெள்ளிக்கிழமை பங்கேற்றார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், கடந்த ஜூலை 21-ஆம் தேதி உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
ஆனால், பாஜக தலைவர்களின் அழுத்தத்தின் காரணமாகதான் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தன.
மேலும், பதவியை ராஜிநாமா செய்த ஜகதீப் தன்கர், பொதுவெளியில் தோன்றாமல் மறைந்திருப்பது ஏன்? என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், பதவியை ராஜிநாமா செய்த பிறகு முதல்முறையாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவில் ஜகதீப் தன்கர் இன்று நேரில் கலந்துகொண்டார்.
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர்கள் வெங்கையா நாயுடு, முகமது ஹமீத் அன்சாரி ஆகியோருடன் ஜகதீப் தன்கரும் அமர்ந்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.