
காத்மாண்டு அருகே ஆந்திர பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பக்தர்கள் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயிலுக்குச் சென்றுவிட்டு உத்தரப்பிரதேச அரசுப் பேருந்தில் கடந்த 9ஆம் தேதி இந்தியா திரும்பிக்கொண்டிருந்தனர்.
இவர்களுடைய பேருந்து இந்தியா-நேபாள எல்லையில் உள்ள சோனாலி அருகே வந்தபோது பேருந்தை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர்.
பேருந்து மீது கற்களை வீசியதில் அதன் கண்ணாடிகள் உடைந்தனர். மேலும் பயணிகளின் உடைமைகளையும் கொள்ளையடித்தனர். இந்த சம்பவத்தில் 8 பக்தர்கள் காயமடைந்தனர்.
சேதமடைந்த பேருந்து வியாழக்கிழமை மாலை மகாராஜ்கஞ்ச் அருகே உள்ள சோனாலி எல்லையை அடைந்தது.
இதுகுறித்து பேருந்து ஊழியர் ஷியாமு நிசாத் கூறுகையில், தாக்குதலில் ஏழு முதல் எட்டு பயணிகள் காயமடைந்தனர். ஆனால் எங்களுக்கு நேபாள ராணுவ வீரர்கள் உதவ வந்தனர்.
பின்னர், இந்திய அரசு காத்மாண்டுவிலிருந்து தில்லிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தது என்றார்.
ஆந்திரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜ் கூறுகையில், இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல முயன்றபோது கும்பல் தாக்கியது. தாக்குதல் நடத்தியவர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி, கண்ணாடிகளை உடைத்து, எங்கள் உடைமைகளைக் கொள்ளையடித்தனர்.
சோனாலி எல்லையை பேருந்து அடைந்த பிறகு அனைத்து பயணிகளும் விமானம் மூலம் தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.