எண்ணெய்க் கப்பல்கள், ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்குத் தடை! ரஷியாவை இறுக்கும் பிரிட்டன்!

ரஷிய எண்ணெய்க் கப்பல்கள் ஆயுத உற்பத்திக்கு முக்கிய பங்களிக்கும் நிறுவனங்கள் மீது பிரிட்டன் தடை விதிப்பு
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்AP
Published on
Updated on
1 min read

ரஷிய எண்ணெய்க் கப்பல்கள் ஆயுத உற்பத்திக்கு முக்கிய பங்களிக்கும் நிறுவனங்கள் மீது பிரிட்டன் தடை உத்தரவிட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தொடர் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வந்தாலும், அவற்றை ரஷியா கண்டுகொள்வதாகவேயில்லை.

இந்த நிலையில், ரஷியாவின் எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் ஆயுத உற்பத்திக்கு முக்கிய பங்களிக்கும் நிறுவனங்கள் மீது பிரிட்டன் தடை விதித்து அறிவித்துள்ளது.

ரஷியாவில் எண்ணெயை ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தப்படும் சுமார் 70 கப்பல்களைக் குறிவைத்து, அவற்றின் செயல்பாட்டை முடக்கும்வகையில், அவற்றின் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளது. மேற்கத்திய தடையை மீறி, எண்ணெய்யை ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தப்படும் இந்தக் கப்பல்களின் மீதான தடையானது, ரஷியாவின் எண்ணெய் வருவாயைக் குறைக்கும்.

ஷேடோ ஃப்லீட் (Shadow fleet) என்ற அமைப்பின் ஒரு பகுதியான இந்தக் கப்பல்கள்தான், ரஷியாவின் பொருளாதாரத்தில் முக்கிய வருவாயை ஈட்டித் தருகிறது.

மேலும், ரஷியாவில் ஏவுகணை மற்றும் ட்ரோன்களுக்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், வேதிபொருள்கள், வெடிபொருள்களை வழங்கி, அந்நாட்டின் ஆயுத உற்பத்திக்கு முக்கிய பங்களிக்கும் 30 நிறுவனங்கள் மீதும் பிரிட்டன் தடை விதித்துள்ளது.

இதையும் படிக்க: பாலஸ்தீன அரசு ஒருபோதும் அமையாது; அது எங்கள் நிலம்: நெதன்யாகு

Summary

UK launches new Russia-related sanctions targeting shadow fleet, weapons suppliers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com