
மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை கண்டறிந்து ஒருவரை தில்லி போலீஸார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனை நதிக்கு அருகே செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை தில்லி போலீஸார் சனிக்கிழமை கண்டுபிடித்தனர்.
யமுனை நதிக்கு அருகில் 3 முதல் 8 அடி ஆழம் வரை தண்ணீர் தேங்கிய வயல்களைக் கடந்து சென்று இந்த தொழிற்சாலையை அவர்கள் கண்டறிந்துள்னர்.
சம்பவ இடத்தை அடைய குழுவிற்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதுராவைச் சேர்ந்த ஷிவ் சரண் (60) கைது செய்யப்பட்டார்.
அவர், தண்ணீர் தேங்கிய வயல்களைப் பயன்படுத்தி தப்பிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் அங்கிருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்டன.
விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு அலிகாரில் இதேபோன்று சோதனையில் கைது செய்யப்பட்ட தனது கூட்டாளி ஹன்வீருக்கு உதவியதாக சரண் தெரிவித்தார்.
அலிகாரிலும் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் மூலப்பொருட்களின் குவியல் அண்மையில் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.