
ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இருந்து ட்ரோன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஃபட்டு கோட்லி கிராமத்தில் வயலில் இருந்து சனிக்கிழமை ட்ரோன் போலீஸாரால் மீட்கப்பட்டது. ட்ரோன் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் இருந்து அனுப்பப்பட்டதா அல்லது திருமண விழா போன்றவற்றிற்காக பயன்படுத்தப்பட்டதாக என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள், பணம் மற்றும் போதைப்பொருட்கள் உள்ளிட்டவைகளை அனுப்ப ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீர், 740 கிமீ நீளமுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையும் 240 கிமீ நீளமுள்ள சர்வதேச எல்லையையும் கொண்டுள்ளது.
இங்கு சர்வதேச எல்லையை பிஎஸ்எஃப்பும், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை ராணுவமும் பாதுகாக்கிறது. எல்லையைத் தாண்டி அனுப்பப்படும் ட்ரோன்களின் அச்சுறுத்தலைச் சமாளிக்க, ட்ரோனை நடுவானில் கண்காணித்து அழிக்க சர்வதேச எல்லையில் சிறப்பு ட்ரோன் எதிர்ப்பு கருவிகளை பிஎஸ்எஃப் நிறுத்தியுள்ளது.
இந்த கருவிகளை பிஎஸ்எஃப் பயன்படுத்திய பிறகு, சர்வதேச எல்லையின் குறுக்கே அனுப்பப்படும் ட்ரோன்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.