
சிபிஐ மாவோயிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் பொதுலா பத்மாவதி தெலங்கானா காவல்துறையிடம் சரணடைந்தார்.
மறைந்த மாவோயிஸ்ட் தலைவர் மல்லோஜுலா கோட்டேஷ்வர் ராவ் என்கிற கிஷன்ஜியின் மனைவி பத்மாவதி (62) என்ற சுஜாதா சிபிஐ(மாவோயிஸ்ட்) கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு தன்னுடைய உடல்நலநம் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாகத் தெலங்கானா டிஜிபி ஜிதேந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த 43 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த பத்மாவதி, தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழுவின் (சத்தீஸ்கர்) கீழ் உள்ள மாவோயிஸ்ட் தளங்களின் புரட்சிகர மக்கள் குழுக்களான ஜனதான சர்க்கார் இன் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.
பத்மாவதியின் சரணடைதலுக்குப் பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் பந்தி சஞ்சய் குமார், ஆயுதங்களைக் கைவிட்டு வளர்ச்சிப் பாதையில் சேருமாறு மாவோயிஸ்ட்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தெலங்கானாவின் ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மாவதி, மத்திய குழு உறுப்பினராகவும், மேற்கு வங்க சிபிஐ (மாவோயிஸ்ட்) மாநிலக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றிய கிஷன்ஜியை மணந்தார்.
கிஷன்ஜி 2011இல் மேற்கு வங்கத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இறந்தார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகள் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.