
பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா இன்னும் இரண்டு வாரங்களில் இந்திய கிரிக்கெட் அணிக்கான விளம்பரதாரரை முடிவு செய்யப்படுமென கூறியுள்ளார்.
ஆசிய கோப்பையில் இந்திய அணி விளம்பரதாரர் பெயர் இல்லாமலே விளையாடி வருகிறது.
மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டுக்கான தடைச் சட்டத்தைத் தொடர்ந்து சமீபத்தில் பிசிசிஐ உடனான ஒப்பந்தத்தில் இருந்து ட்ரீம் 11 வெளியேறியது. இதனால், ஆண்டுக்கு ரூ.358 கோடியை இதனால் பிசிசிஐ இழந்துள்ளது.
மது, சூதாட்டம், கிரிப்டோ கரன்சி முதலான விளம்பரதாரர் அல்லாத நிறுவனங்களை பிசிசிஐ எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பேசியதாவது:
டெண்டருக்கான அறிபிப்பு வெளியாகிவிட்டது. அதை வாங்க அதிகமான ஏலதாரர்களும் வருகிறார்கள். அது முடிவுக்கு வந்தபிறகு உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்.
இன்னும் 15-20 நாள்களில் இறுதி முடிவு எடுக்கப்படும். அதிகமான விளம்பரதாரர்கள் டெண்டரை கோரியுள்ளார்கள். குறிப்பிட்ட ஒருவர் பெயரைச் சொல்ல முடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.