தன்னிறைவுபெற்ற இந்தியாவை உருவாக்குவதில் ஹிந்தி முக்கிய பங்கு: அமித் ஷா

மொழியியல் ரீதியாக தன்னிறைவுபெற்ற இந்தியாவை உருவாக்குவதில் ஹிந்தி முக்கிய பங்கு வகிக்கும் என்று அமித் ஷா பதிவு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மொழியியல் ரீதியாக தன்னிறைவுபெற்ற இந்தியாவை உருவாக்குவதில் ஹிந்தி முக்கிய பங்கு வகிக்கும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் செப்டம்பர் 14 ஆம் தேதியில் ஹிந்தி மொழி நாள் கொண்டாடப்பட்டு வரும்நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் வாழ்த்துப் பதிவில்,

ஹிந்தி நாளில் மனமார்ந்த வாழ்த்துக்கள். நாட்டின் மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படும் ஹிந்தி, தேசிய ஒற்றுமையை ஊக்குவித்து, தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் மொழியாக மாறி வருகிறது.

சுதந்திரப் போராட்டம் முதல் அவசரநிலை காலத்தின் கடினமான நாள்கள் வரை, நாட்டின் குடிமக்களை ஒன்றிணைப்பதில் ஹிந்தி முக்கிய பங்கு வகித்துள்ளது.

அனைத்து மொழிகளையும் ஒன்றாக இணைத்து, வளர்ந்த மற்றும் மொழியியல் ரீதியாக தன்னிறைவு கொண்ட இந்தியாவை உருவாக்குவதில் ஹிந்தி தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பெரம்பலூர் மக்களை சந்திக்க மீண்டும் வருவேன்: விஜய்

Summary

Union Home Minister Amit Shah's appeal on Hindi Diwas

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com