
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி குகைக் கோயில் யாத்திரை, மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாதா வைஷ்ணவி தேவி யாத்திரை மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோயில் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 26 அன்று கத்ரா பெல்ட்டின் திரிகுடா மலைகளில் உள்ள அத்குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 34 பக்தர்கள் பலியாகினர். மற்றும் 20 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து யாத்திரை நிறுத்தப்பட்டது.
கடந்த சில நாள்களாக, தொடர்ந்து அந்தப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் பாதை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையும் பாதிக்கப்பட்டுள்ளதால், கோயிலுக்கு செல்லும் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மோசமான வானிலை மற்றும் இந்தப் பகுதியில் ஏற்பட்ட பல நிலச்சரிவுகள் காரணமாக, மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை தொடர்ச்சியாக 14 நாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வைஷ்ணவி தேவி குகைக் கோயில் யாத்திரை, மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பெரம்பலூரில் விஜய் பிரசாரம் ரத்து! நள்ளிரவில் சென்னை புறப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.