உத்தரப் பிரதேசத்தில் 2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை 19 வயது இளைஞர் பாலியல்ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 8 வயது என்பதால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அலிகரின் புறநகரில் 2-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு (8 வயது) அந்தப் பள்ளியின் காவலாளியின் மகன் கோலு (19 வயது) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கோலுவைக் கைதுசெய்த காவல் ஆய்வாளர் கமலேஷ் குமார் கூறியதாவது:
இரண்டாம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுமியை வெள்ளிக்கிழமை கோலு என்பவர் அறையில் பூட்டி பாலியல் தொல்லை அளித்திருக்கிறார். இருப்பினும் அந்தச் சிறுமி அங்கிருந்து கூச்சலிட்டு, தப்பிச் சென்றிருக்கிறார்.
பின்னர், கோலுவை பிஎன்எஸ், போக்ஸோ விதிகளின்படி கைது செய்தோம் என்றார்.
Summary
A 19-year-old youth allegedly molested an eight-year-old girl at a school on the outskirts of Uttar Pradesh's Aligarh, police said on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் ‘போக்ஸோ’வில் கைது

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சுமை தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: எலக்ட்ரீஷியனுக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



