டிஜிட்டல் அரெஸ்ட் எனும் இணையவழி மோசடியால் ஹைதராபாத்தைச் சேர்ந்த 76 வயது ஓய்வுபெற்ற அரசு பெண் மருத்துவர் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி மோசடி தற்போது பெருமளவில் அதிகரித்து வருகிறது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் என வங்கிக் கணக்கில் அதிக பணம் வைத்திருப்பவர்களைக் குறிவைத்து இந்த மோசடி நடக்கிறது.
உங்களுடைய மொபைல் எண்ணுக்கு விடியோ காலில் அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில், சிபிஐ / வருமானவரித் துறை/ காவல்துறை அதிகாரிகள் என்று கூறி, நீங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவோ குற்றம் செய்திருப்பதாகவோ உங்களை நம்பும்படி செய்து பின்னர் 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்கிறோம் என்று ஆன்லைனிலே வைத்திருக்கின்றனர். பல மணி நேரம், பல நாள்கள்கூட இப்படியே இருக்க வைக்கின்றனர். இதன் மூலமாக பலரும் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் 76 வயது ஓய்வுபெற்ற அரசு மருத்துவர், 3 நாள்கள் டிஜிட்டல் அரெஸ்ட்டுக்குப் பிறகு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
மலக்பேட்டையில் உள்ள நாகார்ஜுனா மருத்துவமனையில் மூத்த தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த பெண் மருத்துவரை, கடந்த செப். 5 ஆம் தேதி, சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் என்று கூறி மோசடி கும்பல் தொடர்பு கொண்டுள்ளது. பெங்களூரு காவல்துறை லோகோ, காவல்துறை ஆவணங்களைக் காட்டி அவரை நம்ப வைத்துள்ளனர். அவரிடம் உள்ள பணத்தைத் தரவில்லை என்றால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி டிஜிட்டல் கைது செய்வோம் என்று மிரட்டியுள்ளனர்.
அவரும் கடந்த செப். 6 ஆம் தேதி தனது வங்கிக் கணக்கில் இருந்து மோசடி கும்பல் கொடுத்த ஐசிஐசிஐ வங்கிக் கணக்கிற்கு ரூ. 6.6 லட்சம் அனுப்பியுள்ளனர். ஆனாலும் மோசடி கும்பல் தொடர்ந்து அச்சுறுத்தல் செய்யவே அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து, வேறு ஒரு மொபைல் எண்ணிலிருந்தும் அவருக்கு அழைப்பு வரவே, அவர் தீவிர நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செப். 8 அன்று இறந்தார்.
டிஜிட்டல் மோசடி கும்பல் காரணமாகவே அவர் இறந்ததாக செப். 9 ஆம் தேதி அதாவது அவரது இறுதிச் சடங்கிற்குப் பிறகே காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
மருத்துவர் இறந்தபிறகும் அந்த கும்பல் தொடர்ந்து மருத்துவரின் எண்ணுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளதாகவும் போலீசார் கூறினர். இணையவழி மோசடியால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் அரெஸ்ட் அல்லது இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்கவும்.
Summary
76 year old Hyderabad resident dies after 3 days of digital arrest
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







