
கூகுளின் ஜெமினியின் 'நேனோ பனானா ஏஐ' புகைப்படங்கள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றன.
'சாரி ட்ரெண்ட்' எனும் பெண்கள் சேலை அணிந்திருக்கும் புகைப்படங்கள், 3டி புகைப்படங்கள், ரெட்ரோ ஸ்டைல் என செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்களை உருவாக்குவதில் இளைஞர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலகம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் செய்யறிவு தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இதன் பாதிப்பு அதிகம் இருக்கலாம் என்று நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்.
இதனிடையே, பலருக்கும் குறிப்பாக கற்றுக்கொள்ளும் வயதில் உள்ள இளைஞர்களுக்கு இந்த தொழில்நுட்பம் பெரிதும் உதவியாக இருக்கிறது. பலரின் வேலையை எளிதாக்குகிறது என்று கூறுகிறார்கள்.
கூகுளின் ஜெமினி 2.5 ஏஐ (பனானா ஏஐ) நமக்குத் தேவையான வசதிகளுடன் புகைப்படங்களை உருவாக்கித் தருகிறது.
புகைப்படங்களில் எடிட் செய்வது, பல புகைப்படங்களை இணைத்து ஒரு புகைப்படத்தை உருவாக்குவது என பல வேலைகளைச் செய்கிறது.
உங்களுக்கு என்ன மாதிரியான புகைப்படம் வேண்டுமோ அதை ஏஐ-யிடம் வார்த்தைகளில் தெரிவிக்க வேண்டும். உங்கள் உள்ளீடுகளுக்கு ஏற்ப அது புகைப்படங்களை உருவாக்கித் தரும். உள்ளூர் மொழிகளும் ஏஐ புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக தமிழில் தேவையான தகவல்களை வழங்கினாலும் ஏஐ அதற்கேற்ப புகைப்படங்களை மாற்றித் தருகிறது.
மேலும் பொழுதுபோக்கிற்காகவும் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட 3டி புகைப்படங்கள், பெண்கள் சேலை அணிந்திருக்கும் புகைப்படங்கள், ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்களும் இணையத்தை கலக்கி வருகின்றன.
எப்படி செய்ய வேண்டும்?
இணையம் அல்லது மொபைல் போனில் ஜெமினி செயலி வழியாக கூகுள் ஏஐ ஸ்டூடியோவை திறக்க வேண்டும்.
உங்களுக்கு தேவையான புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு அதை எந்த கோணத்தில் எந்த பின்புலத்தில் எந்த தோற்றத்தில் மாற்ற வேண்டும் என்ற உள்ளீட்டைத் தயார் செய்ய வேண்டும்.
எந்த கலரில் உடை அணிய வேண்டும், எந்த மாதிரி ஹேர்ஸ்டைல், பின்புறத்தில் என்ன இருக்க வேண்டும்? என அனைத்து விவரங்களையும் கொடுக்கலாம். அதற்கேற்ப மிகவும் துல்லியமாக அந்த புகைப்படம் தயாராகிறது. அதுவே 3டி புகைப்படம் என்றால் அதுவும் கிடைக்கிறது. இதற்கு முகம் தெளிவாகத் தெரியும்படியான புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இப்போதைய புகைப்படத்தை 1970, 80களில் உள்ள உடையில் கருப்பு- வெள்ளை புகைப்படங்களாக மாற்றுவது, 3டி புகைப்படங்கள் என தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
குறிப்பாக பெண்கள் பலரும் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, 'சேலை கட்டியிருப்பது போல' மாற்றி தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகின்றனர்.
வெள்ளை நிற மற்றும் கருப்பு நிற புடவை, அனிமேஷன் கேரக்டர்கள், ஸ்பைடர் மேன், ரெட்ரோ ஸ்டைல் உள்ளிட்டவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கான சில குறிப்பிட்ட 'பிராம்ப்ட்' (உள்ளீடு விவரங்கள்)களும் இணையத்தில் கிடைக்கின்றன. அந்த உள்ளீடுகளை அப்படியே காப்பி - பேஸ்ட் செய்து உங்கள் புகைப்படத்துடன் ஏஐ-யிடம் கொடுக்க வேண்டும். பொழுதுபோக்காக பலரும் இதைச் செய்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் இது ஒரு பக்கம் பொழுதுபோக்காக இருந்தாலும் மறுபக்கம் இந்த புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தக் கூடும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுகின்றனர்.
இதையும் படிக்க | குழந்தைகளின் உடல் பருமனுக்கு காரணம் இதுதான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.