
பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசி வாயிலாக, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின், 75 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்.17), பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும், பிரதமர் மோடிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசி வாயிலாகத் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது 75வது பிறந்தநாளுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த நண்பர் புதினுக்கு நன்றி எனவும், உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண இந்தியா அனைத்து சாத்தியமான பங்களிப்புகளையும் செய்ய தயாராக இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: 140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.