புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து..
புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து
புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துPhoto : X
Published on
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, துபை புர்ஜ் கலிஃபாவில் அவரது புகைப்படம் புதன்கிழமை இரவு ஒளிரச் செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தனது 75 வது பிறந்த நாளை புதன்கிழமை கொண்டாடினார். அவருக்கு அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், இத்தாலி, இஸ்ரேல், நியூசிலாந்து உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், துபையில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடமாக கருதப்படும் புர்ஜ் கலிஃபாவில் பிரதமர் நரேந்திர மோடியை கெளரவிக்கும் விதமாக, அவரது புகைப்படத்தை ஒளிரச் செய்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான தூதரக ரீதியிலான உறவு மேம்பட்டு வரும் சூழலில், பிரதமர் மோடியை அந்நாட்டு அரசு கெளரவித்துள்ளது.

முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பகிர்ந்த வாழ்த்துச் செய்தியில்,

”பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழவும், இந்தியாவின் முன்னேற்றத்தையும் மக்களின் செழிப்பையும் முன்னேற்றுவதில் தொடர்ந்து வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Summary

Birthday wishes for Modi at Burj Khalifa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com