விண்வெளிக்கு வயோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டம்!

விண்வெளிக்கு வயோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ISRO working on 40-storey-tall rocket
இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்-
Published on
Updated on
1 min read

கோவை : விண்வெளிக்கு வயோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்று கோவை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் நாராயணன், ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டம். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆளில்லாத விண் ஏவூர்தி அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதில் வயோமித்ரா என்ற எந்திர மனிதரை அனுப்ப உள்ளோம். டிசம்பர் மாதம் இறுதியில் அது நடைபெறும். இது முடிந்தவுடன் இரண்டு ஆளில்லா ராக்கெட் களை அனுப்ப உள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.

2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனிதர்களை அனுப்பவுள்ளோம். ககன்யான் திட்டத்தில் 85 சதவிகிதம் சோதனைகள் நிறைவு பெற்றுள்ளது. மனிதர்களை அனுப்புவதற்கு பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். ராக்கெட்டில் விபத்து நடந்தால் மனிதர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதையும் ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

ஐஎஸ்ஆர்ஓ மட்டுமல்லாமல் ஏரோ, நேவி உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்கிறார்கள். உலகத்தில் 9 இடங்களில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம். நிலாவில் இருக்கக்கூடிய கேமராவில் சிறந்த கேமரா நம் நாட்டினுடையது தான்

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதிலும் வெற்றி அடைந்த முதல் நாடு இந்தியாதான். ராக்கெட் என்ஜினிலும் சாதனைகளை படைத்துள்ளோம். நம் நாட்டில் 55 சதவிகிதம் பாமர மக்களின் விண்ணப்பங்கள் வர பெற்றுள்ளது. மாணவர்கள் அனைவரும் விண்வெளி சார்ந்த விஷயங்களில் ஆர்வமாக உள்ளனர். செய்யறிவு (AI) தொழில்நுட்பம் விண்வெளித் துறையிலும் வந்துவிட்டது. வயோமித்ரா என்பதும் ஏஐ டெக்னாலஜிதான். சந்திராயன் நான்கில் நிலாவில் மாதிரிகளை எடுத்து வருவதிலும் செய்யறிவு ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்த போகிறோம்.

Summary

ISRO plans to send a robotic human named Vyomitra into space.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com