

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை வரவேற்ற உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாட்டிற்கு பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு என்று கூறியுள்ளார்.
செய்தியாளர்களின் சந்திப்பில் உரையாற்றிய முதல்வர் ஆதித்யநாத்,
ஜிஏஸ்டி கவுன்சில் வரிச் சலுகைகள் மற்றும் சீர்திருத்தங்கள் செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளது. இது மக்களுக்குப் பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு என்று அவர் கூறினார்.
ஜூலை 2017இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, வரி விகிதங்கள் மற்றும் செஸ் மிக அதிகமாக இருந்ததாலும், ஒருங்கிணைந்த வரிவிதிப்பு முறை இல்லாததாலும் நேர்மையாக வரி செலுத்துவோரும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
ஜிஎஸ்டி வரிகளை ஒரு நாடு, ஒரு வரி என்ற கொள்கையின் கீழ் ஒருங்கிணைத்தது. இது ஜிஎஸ்டி பதிவுகளில் குறிப்பிடத்தக்க உயர்வுக்கும், பொருளாதாரத்திற்கான நேரடி நன்மைகளுக்கும் வழிவகுத்தது.
புதிய ஜிஎஸ்டி இரண்டு முக்கிய வரி அடுக்குகளுடன் கட்டமைப்பை எளிமைப்படுத்தியுள்ளன. 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் இவை அனைத்து துறைகளிலும் உள்ள சாமானியர்களுக்கும் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பயனளிக்கும்.
இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பொருளாதாரத்திற்கு ரூ. 2 லட்சம் கோடி முதலீட்டை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி வீட்டு உபயோகப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி இப்போது பூஜ்ஜிய சதவீதமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
விவசாய உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது செலவுகளைக் குறைக்கவும், விவசாயப் பொருளாதாரத்தை உயர்த்தவும் உதவும். மேலும் எழுதுபொருள்கள், குறிப்பேடுகள் இப்போது மலிவாக இருப்பதால் மாணவர்கள் பயனடைவார்கள், சுகாதார காப்பீடும் கணிசமாகக் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிக்க: ராகுலின் குற்றச்சாட்டு தவறானவை, ஆதாரமற்றவை! தேர்தல் ஆணையம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.