
யுரேனியம் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலம், அணு ஆயுத உற்பத்திக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்க முடியும் என்று அந்த மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கூறினார்.
ஜார்க்கண்டில் நடைபெற்ற தொழில்நுட்ப கருத்தரங்கில் உரையாற்றிய முதல்வர் சோரன்,
பாதுகாப்புத் துறையைத் தன்னிறைவு பெறச் செய்ய மத்திய அரசுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தனது அரசு தயாராக உள்ளது.
ஜார்க்கண்ட் யுரேனியம் நிறைந்த மாநிலம், அணு ஆயுத உற்பத்திக்குப் பங்களிக்க முடியும் என்றார்.
அதேசமயம் பாதுகாப்புத் துறையைத் தன்னிறைவு பெறச் செய்ய மத்திய அரசுடன் முழுமையாக ஒத்துழைக்க மாநில அரசு தயாராக உள்ளதாக சோரன் கூறினார்.
அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு யுரேனியம் ஒரு முக்கிய அங்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: செப். 21 சூரிய கிரகணம் இந்தியாவில் காண முடியாதது ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.