
திருவனந்தபுரத்தில் பாஜக கவுன்சிலர் கே. அனில் குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
திருமலா வார்டு கவுன்சிலரும் பாஜக தலைவருமான கே. அனில் குமார் திருமலையில் உள்ள ஷாப்பிங் வளாகத்திற்குள் அமைந்துள்ள பாஜக வார்டு கவுன்சிலர் அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டார். நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து அவர்கள் விசாரணையைத் தொடங்கினர். அலுவலகத்தில் அனில் குமார் எழுதியதாக நம்பப்படும் ஒரு குறிப்பை போலீஸார் கண்டெடுத்தனர். அந்தக் குறிப்பில், கூட்டுறவு சங்கத்துடன் தொடர்புடைய நிதிப் பிரச்னைகளைக் குறிப்பிட்டுள்ளதாகவும், கட்சித் தலைமையிடமிருந்து ஆதரவு கிடைக்காதது குறித்து ஏமாற்றம் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அந்தக் குறிப்பின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கூட்டுறவு சங்கத்துடன் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக மாவட்டத் தலைவர்கள் தெரிவித்தனர். இதனிடையே செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகங்களை கவுன்சிலர் அலுவலகத்தில் இருந்த பாஜகவினர் சிலர் தாக்கியதாக புகார் எழுந்ததுள்ளது.
அவர்கள் கேமராக்களை சேதப்படுத்தியதோடு சில பெண் பத்திரிகையாளர்களையும் படிக்கட்டுகளில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.