
அமெரிக்காவில் வெளிநாடுகளிலிருந்துச் சென்று பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கான கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களைச் சேர்த்துக்கொள்ள விரும்பினால், அந்த ஊழியர்கள் அமெரிக்காவுக்கு வருகை தர வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கான கட்டணம் 1,00,000 டாலராக (ஒரு லட்சம் டாலர்) உயர்த்தப்படுவதாக வெடிகுண்டைப் போன்றதொரு அறிவிப்பை வெள்ளிக்கிழமை(செப். 19) வெளியிட்டார் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இந்த நிலையில், அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டுப் பணியாளர்களை வேலையில் வைத்திருக்கும் முக்கிய நிறுவனங்களின் பெயர்கள் ஃபெடரல் தரவுகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. அதன்படி, கீழ்காணும் நிறுவன ஊழியர்களிடமே இந்த புதிய நடைமுறையின் தாக்கம் அதிகமாக எதிரொலிக்கும். அதற்கான முக்கிய காரணம், இந்நிறுவனங்கள் இனிமேல் அதிக தொகையை வெளிநாட்டுப் பணியாளர்களுக்காகச் செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
ஆமெஸான் காம் சர்வீசஸ் எல்எல்சி
(10,000க்கும் அதிகமான வெளிநாட்டுப் பணியாளர்கலைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது)
5,000க்கும் அதிகமான வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேசன்
மெட்டா ப்ளாட்ஃபார்ம்ஸ்
4,000-க்கும் அதிகமான வெளிநட்டுப் பணியாளர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள்
ஆப்பிள் ஐஎன்சி
கூகுள் எல்எல்சி
2,000-க்கும் அதிகமான வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள்
காக்னிஸண்ட் டெக்னாலஜி சொல்யூசன்
ஜேபி மோர்கன் சேஸ் அண்ட் கோ
வால்மார்ட் அசோசியேட்ஸ் ஐஎன்சி
டிலாய்ட் கன்சல்ட்டிங் எல்எல்பி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.