
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் 'எக்ஸ்' தளப் பக்கம் இன்று ஹேக் செய்யப்பட்டது.
ஹேக் செய்த பிறகு ஹேக்கர்கள் அதில் பாகிஸ்தான் மற்றும் துருக்கி கொடிகளின் படங்களை பதிவிட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் களம்காணும் நிலையில் இரண்டு இஸ்லாமிய நாடுகளின் புகைப்படங்கள் அடங்கிய காட்சிகளை ஹேக்கர்கள் நேரலையில் ஒளிபரப்பியுள்ளனர்.
நாங்கள் உடனடியாக சைபர் கிரைம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தோம். துணை முதல்வரின் எக்ஸ் கணக்கைக் கவனித்துக்கொள்ளும் எங்கள் குழு பின்னர் கணக்கை மீட்டெடுத்தது என்று அந்த அதிகாரி கூறினார்.
ஹேக் செய்யப்பட்ட 'எக்ஸ்' தளப் பக்கத்தை மீட்டெடுக்க 30 முதல் 45 நிமிடங்கள் ஆனது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.