
மத்தியப் பிரதேசத்தின் 8 வயது சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் பர்வானி மாவட்டத்தில் உள்ள விவசாய வயலில் சிறுமி கீதாவின் தாயும் மற்ற தொழிலாளர்களும் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சிறுத்தை சிறுமி கீதாவின் கழுத்தைப் பிடித்து சிறிது தூரம் இழுத்துச் சென்றது. உடனே சிறுமியின் தாயும் மற்றவர்களும் சத்தம் எழுப்பி சிறுத்தையை துரத்தினர்.
பின்னர் அந்த சிறுத்தை சிறுமியை விட்டுவிட்டு அருகிலுள்ள காட்டுக்குள் ஓடியது. காயமடைந்த சிறுமியை சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அச்சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக வன அதிகாரி ஆஷிஷ் பன்சோட் தெரிவித்தார்.
வனத்துறையின் ரோந்து குழுக்களும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சிறுத்தையை கண்டுபிடித்துவிட்டதாகவும், அதனைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் பன்சோட் மேலும் தெரிவித்தார்.
கடந்த 35 நாள்களில் இப்பகுதியில் சிறுத்தைகளால் ஏற்படும் இரண்டாவது மனித மரணம் இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.