ஒடிசாவில் சுவர் இடிந்து பழங்குடியின தம்பதியர் பலி!

பலாசோர் மாவட்டத்தில் மண் சுவாரின் ஒருபகுதி இடிந்து விழுந்ததில் பழங்குடியின தம்பதியினர் உயிரிழந்தனர்.
Tribal couple dies
சுவர் இடிந்து விழுந்ததில் தம்பதியினர் பலி
Published on
Updated on
1 min read

ஒடிசாவின் பலாசோர் மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மண் சுவாரின் ஒருபகுதி இடிந்து விழுந்ததில் பழங்குடியின தம்பதியினர் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு மாவட்டத்தில் உள்ள பாஸ்தா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள மகாதேவ் சரணி கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.

இறந்தவர்கள் பிதா முர்மு (35), அவரது மனைவி லட்சுமி (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அவர்களின் 12 வயது மகள் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

ஒடிசாவில் பெய்த கனமழை காரணமாக மண் சுவர் நனைந்ததாகவும், அதன் ஒரு பகுதி இடிந்து தம்பதியினர் தூங்கிக் கொண்டிருந்த இடத்தில் விழுந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

பாஸ்தா காவல் நிலைய ஆய்வாளர் ரஞ்சீத் குமார் சாஹூ, உடல்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாகவும் கூறினார்.

Summary

A tribal couple died and their daughter was injured when a portion of a mud wall collapsed on them while they were sleeping in their house in Odisha's Balasore district, police said on Monday.

இதையும் படிக்க: கேரள கடற்கரையில் மீனவர் வலையில் சிக்கிய பாம்பு சிலைகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com