

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியா்கள் 10.9 லட்சம் பேருக்கு அவா்களின் 78 நாள்கள் ஊதியத்துக்கு இணையாக உற்பத்தித் திறன் சாா்ந்த ஊக்கத் தொகையை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘அதிகாரிகள் அளவில் அல்லாத 10.9 லட்சம் ரயில்வே ஊழியா்களின் சிறந்த பணி செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஊக்கத் தொகை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவா்களுக்கு வழங்கப்பட உள்ள மொத்த ஊக்கத் தொகை ரூ.1,886 கோடியாகும்’ என்றாா் அவா்.
ஒவ்வோா் ஆண்டும் துா்கா பூஜை, தசரா விடுமுறை, தீபாவளிக்கு முன்பாக தகுதியுள்ள ரயில்வே ஊழியா்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மருத்துவப் படிப்பு இடங்களை அதிகரிக்க ஒப்புதல்: நாடு முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை அதிகரிக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
‘மத்திய, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 5,000 இடங்கள் அதிகரிக்கப்படும். அதுபோல, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) மத்திய அரசு மேம்பாட்டுத் திட்ட விரிவாக்கத்தின் கீழ் ஓா் இடத்துக்கு ரூ. 1.50 கோடி செலவு உச்சவரம்புடன் கூடுதலாக 5,023 இடங்களை உருவாக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது’ என்று அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறினாா்.
இதையும் படிக்க... பாங்காக் சாலையில் ஏற்பட்ட மகா பள்ளம்! புகைப்படங்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.