
ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகளிடம் எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் மற்றும் வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் இந்தியா அனுமதி கோரியதாகக் கூறப்படுகிறது.
அண்மையில், அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தை மேற்கொண்டது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, ஈரான் மற்றும் வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் இந்தியா அனுமதி கோரியதாக அதிகாரி ஒருவர் கூறியதாக ப்ளும்பெர்க்கில் குறிப்பிட்டுள்ளது.
ஒரே நேரத்தில் ரஷியா, ஈரான், வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், அனைத்து முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கும் மற்றும் உலகளாவிய விலையில் அதிகரிப்புக்கும் வழிவகுக்கும் என்று இந்திய பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க: 13 மாத குழந்தை கொடூரக் கொலை! 17 ஆண்டு வழக்கில் கொலையாளிக்கு விஷ ஊசியால் மரண தண்டனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.