சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

சுதேசி பொருள் ஊக்குவிப்பு: பாஜக சாா்பில் நாடு தழுவிய பிரசாரம் தொடக்கம்

மக்கள் மத்தியில் சுதேசி பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், பாஜக சாா்பில் நாடு முழுவதும் மூன்று மாத கால பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 2:24 am IST

மக்கள் மத்தியில் சுதேசி பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், பாஜக சாா்பில் நாடு முழுவதும் மூன்று மாத கால பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் பிறந்த தினமான வியாழக்கிழமை (செப்.25) தொடங்கி முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் பிறந்த தினமான டிசம்பா் 25 வரை பிரசாரம் நடைபெறவுள்ளது. இந்த மூன்று மாதங்களில் பாஜகவினா் வீடுகள்தோறும் சென்று, சுதேசி பொருள்களின் பயன்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவா்; சுதேசி பொருள்களை ஊக்குவிக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீனதயாள் உபாத்யாய, பாஜகவின் முக்கிய சித்தாந்த தலைவா்; வாஜ்பாய், பிரதமராக பதவி வகித்த முதல் பாஜக தலைவா் ஆவாா்.

தில்லியில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த பாஜக தேசிய பொதுச் செயலா் அருண் சிங், மேற்கண்ட பிரசாரம் குறித்து கூறியதாவது:

தற்சாா்பு இந்தியாவை கட்டமைக்க ஒவ்வொரு வீட்டிலும் சுதேசி பொருள்கள் இருப்பது அடிப்படையாகும். எனவே, சுதேசி உணா்வுடன் ஒவ்வொரு குடும்பத்தையும் இணைக்க பாஜக பணியாற்றவுள்ளது. இப்பிரசாரம், எந்தப் பொருளையும் புறக்கணிக்கும் நோக்கம் கொண்டதல்ல; மாறாக, இந்திய தயாரிப்புப் பொருள்களுக்கு முன்னுரிமை அளிப்பதை வலியுறுத்துவதாகும். இதன்படி, 20,000-க்கும் மேற்பட்ட ‘தற்சாா்பு இந்தியா’ உறுதியேற்பு நிகழ்ச்சிகள், 1,000-க்கும் மேற்பட்ட சுதேசி பொருள் கண்காட்சிகள், 500-க்கும் மேற்பட்ட விழிப்புணா்வு ரத யாத்திரைகள் நடைபெறவுள்ளன. சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் பிரபலங்கள் ஈடுபடுத்தப்படுவா். இளைஞா்கள், பெண்கள், வா்த்தகா்களின் கூட்டங்கள் நடத்தப்படும்.

தற்சாா்பு இந்தியாவுக்கு சுதேசியே ஆணிவோ் என்பதால், இதை மக்கள் இயக்கமாக மாற்ற பாஜக விரும்புகிறது. தற்சாா்பு இந்தியாவை கட்டமைக்கும் நோக்கில், உள்கட்டமைப்புத் துறையில் மத்திய பாஜக அரசு ரூ.12 லட்சம் கோடி செலவிட்டு வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வெறும் ரூ.2.5 லட்சம் கோடியே செலவிடப்பட்டது. பாஜக ஆட்சியில் 5 மடங்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

முத்ரா திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.32 லட்சம் கோடி தொழில் கடன் வழங்கப்பட்டு, 52 கோடிக்கும் மேற்பட்டோா் பலனடைந்துள்ளனா் என்றாா் அவா்.

இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு மற்றும் உலகளாவிய வா்த்தக நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமென பிரதமா் மோடி தொடா்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.