
பிகாரில் மகளிர் சுயவேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தில்லியிலிருந்து இன்று தொடங்கி வைத்தார்.
பிகாரில் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 75 லட்சம் பெண்களுக்கு ரூ. 10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தைத் தில்லியிலிருந்து காணொளி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் இணைந்துள்ள பெண்களுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்படும் என பிகார் அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி மற்றும் பல மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் பாட்னாவிலிருந்து காணொளி மூலம் கலந்துகொண்டனர்.
மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்தத் திட்டத்தின் துவக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலிருந்து ஒரு பெண் பயணடைவார். இந்தத் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையால் தான் ஈர்க்கப்பட்டதாகப் பிரதமர் கூறினார்.
இந்தத் திட்டத்தின் அளவு மிகப்பெரியது என்றும், பிகார் பெண்கள் மளிகைப் பொருள்கள், பாத்திரங்கள், அழகுசாதனப் பொருள்கள், பொம்மைகள் மற்றும் எழுதுபொருள்கள் விற்கும் கடைகளைத் திறக்கலாம்.
கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு போன்ற கால்நடை தொடர்பான தொழில்களையும் அவர்கள் தொடரலாம். இந்தத் தொழில்களுக்குத் தேவையான பயிற்சி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பிகாரில் ஏற்கெனவே சுய உதவிக் குழுக்களின் வலுவான வலையமைப்பு உள்ளது என்றும், கிட்டத்தட்ட 11 லட்சம் குழுக்கள் தீவிரமாகச் செயல்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியிலிருந்தபோது நிலவிய பயங்கரவாதத்தை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது எந்த மக்களும் பாதுகாப்பாக இல்லை. நக்சல் வன்முறையின் பயங்கரவாதம் பரவலாக இருந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பெண்களுக்குச் சுமையாக இருந்தது. நிதிஷ் குமாரின் தலைமையில் பெண்கள் மிகப்பெரிய நிம்மதியை உணர்ந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.