
லடாக்கில் வன்முறையைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார்.
யூனியன் பிரதேசமான லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டணையை நீட்டித்தல் தொடர்பாக, செப்டம்பர் 10 ஆம் தேதிமுதல் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்பட 15 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருவரின் உடல்நிலை செவ்வாய்க்கிழமையில் (செப். 23) மோசமடைந்ததையொட்டி, அப்பகுதியில் போராட்டம் வெடித்தது.
இதனிடையே, புதன்கிழமை காலையில் இளைஞர்கள் குழு ஒன்று, தீவைப்பு மற்றும் வன்முறையில் ஈடுபட்டதுடன், பாஜக அலுவலகத்தையும் தாக்க முற்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது, 4 பலியாகினர்; மேலும், 30 காவல்துறையினர் உள்பட சுமார் 60 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலர் மோசமான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
வன்முறை தீவிரமடைந்ததையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை சோனம் வாங்சுக் முடித்துக் கொண்டார்.
லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணையை நீட்டிப்பது குறித்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகக் கூறிய மத்திய அரசு, பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தில் சிலருக்கு மகிழ்ச்சி இல்லை என்று சோனம் மீது குற்றம் சாட்டியது.
மேலும் வங்கதேசம் மற்றும் நேபாளம் போன்று ஒரு சூழ்நிலையை இந்தியாவிலும் உருவாக்கும் முயற்சியாக காங்கிரஸின் மோசமான சதிதான், இந்த வன்முறை என்று பாஜக குற்றம் சாட்டியது.
அதுமட்டுமின்றி, ``லடாக் வன்முறையை ஜென் ஸீ போராட்டம்போல சித்திரிக்க முயற்சி நடந்தததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால், அது ஜென் ஸீ போராட்டம் அல்ல; காங்கிரஸின் போராட்டம்தான் என்பது தெரிந்தது’’ என்று பாஜக எம்.பி. சம்பித் பத்ரா கூறினார்.
இந்த நிலையில், மாநிலத்தில் வன்முறையைத் தூண்டியதாக, தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றிரவு அல்லது நாளை காலையில் அவர் லடாக்கைவிட்டு வெளியேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: டிரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லையா? ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.