
கரூரில் விஜய்யின் அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நெரிசல் பலி விவரங்களைக் குறித்து தமிழக ஆளுநர், முதல்வரிடம் அமித் ஷா தொலைபேசி வழியாக பேசி கேட்டறிந்தார்.
அப்போது அவர், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருப்பதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கரூரில் நெரிசல் ஏற்பட்டதில் அங்கு திரண்டிருந்த மக்கள் பலர் பலியானதற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.
விஜய்யின் அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 38 பேர் பலியாகினர். கரூரில் மாவட்ட அரசு மருத்துவமனையில் கள நிலவரத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுடன் பேசிய செந்தில் பாலாஜி, வி58 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.