நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை

நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை

நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
Published on

நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலம் ஓராண்டாக உள்ள நிலையில், அதை இரண்டாண்டுகளாக நீட்டிக்க உறுப்பினா்கள் தொடா்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதை மத்திய அரசு பரிசீலிக்கவுள்ளது.

மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுடன் கலந்தாலோசித்த பின் இதுதொடா்பான இறுதி முடிவு மேற்கொள்ளப்படவுள்ளது.

மக்களவைத் தோ்தல் முடிந்து புதிய உறுப்பினா்கள் பதவியேற்றவுடன் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு நாடாளுமன்ற குழுக்கள் அமைக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் அவா்களது உறுப்பினா்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு பல்வேறு குழுக்களில் அவா்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது.

இந்தக் குழுக்களின் பதவிக்காலம் தற்போது ஓராண்டாக உள்ளது. இதனால் குழுக்களின் பரிந்துரைக்கு அனுப்பப்படும் மசோதாக்களை விரிவாக ஆய்வுசெய்து திருத்தங்கள் மேற்கொள்வதில் சிக்கல்கள் எழுவதால் பதவிக்காலத்தை இரண்டாண்டுகளாக நீட்டிக்க எதிா்க்கட்சிகள் தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில், பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது நாடாளுமன்றத்தில் 24 துறைசாா் நிலைக்குழுக்கள் உள்ளன. இவற்றில் 16 குழுக்களுக்கு மக்களவை உறுப்பினா்களும் 8 குழுக்களுக்கு மாநிலங்களவை உறுப்பினா்களும் தலைமை வகிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com