
லடாக்கின் குரலை ஒடுக்குவதற்காக இளைஞர்களைக் கொன்று பாஜக பதிலடி அளித்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார். லடாக் யூனியன் பிரதேசத்துக்கு தனி மாநில அந்தஸ்து கோரி கடந்த வாரம் வெடித்த இளைஞர்களின் பெரும் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், இது குறித்து ராகுல் காந்தி இன்று(செப். 28) தமது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: “லடாக்கின் வியக்கத்தகு கலாசாரம், பாரம்பரியம் மற்றும் அங்குள்ள மக்கள் ஆகியோர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
லடாக்கியர்கள் தங்களுக்கொரு குரல் வேண்டும் என்கின்றனர். ஆனாக், அதற்கு பாஜக, 4 இளம் பருவ ஆண்களைக் கொன்றும் சோனம் வாங்க்சுக்கை சிறையிலடைத்தும் பதிலடி அளித்துள்ளது.
ஆகவே, கொலையை நிறுத்துங்கள்.
வன்முறையை நிறுத்துங்கள்.
லடாக்குக்கு ஒரு குரல் வேண்டும், அதனை வழங்குங்கள்.
அவர்களுக்கு அரசமைப்பின் 6-ஆவது பட்டியலை வழங்குங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.