
பிகாரில் மூன்று அம்ரித் பாரத் ரயில்களையும், நான்கு புதிய பயணிகள் ரயில்களையும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
தர்பங்காவிலிருந்து அஜ்மீர் வரையிலான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், முசாபர்பூரிலிருந்து ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் மற்றும் சாப்ரா முதல் தில்லி வரையிலான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று ரயில்களும், நான்கு புதிய பயணிகள் ரயில்களும் தொடங்கப்பட்டது.
தொடங்கப்பட்ட மூன்று அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பிகாரில் 62 நிறுத்தங்களுடன், 25 மாவட்டங்களை இணைக்கும், இது மக்களுக்கான இணைப்பை அதிகரிக்கும்.
பிகாரில் ரயில்வே துறையில் ஏற்பட்ட வளர்ச்சியை எடுத்துரைத்த அவர், பிகாரில் முன்பு ரூ.1000 கோடி மட்டுமே ரயில்வே பட்ஜெட் இருந்தது, அது இப்போது ரூ. 10 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. ரயில்வே முழுமையாக மின் மயமாக்கப்பட்டுள்ளது. 1899 கி.மீ புதிய பாதைகள் அமைக்கப்பட்டன. மேலும் பல திட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்றார்.
தற்போது பிகாரில் 28 வந்தே பாரத் சேவைகள் இயக்கப்படுகின்றன. 25 மாவட்டங்களை 42 நிறுத்தங்களுடன் இணைக்கின்றன. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 28 மாவட்டங்களில் 62 தனித்துவமான நிறுத்தங்களுடன் உள்ளடக்கப்படும். பிகாரில் நமோ பாரத் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் கூறினார்.
வரவிருக்கும் தீபாவளி மற்றும் சத் பூஜைக்கான ஏற்பாடுகளை எடுத்துரைத்த அவர், கடந்தாண்டு, சத் மற்றும் தீபாவளியின் போது 7,500-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த முறை 12,500-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமரின் ஆசிர்வாதத்துடனும், முதல்வரின் தலைமையுடனும், பிகாரில் ரயில்வே மேம்பாடு வேகமாக முன்னேறி வருகிறது. வரும் காலங்களில், பிகார் அதன் புகழ்பெற்ற வரலாற்றை மீட்டெடுக்கும், நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கப் பங்கை வகிக்கும் என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க: வீட்டைவிட்டு புறப்பட்ட விஜய்! எங்கே சென்றார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.