
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சியின் வருடாந்திர தசரா பேரணியை ரத்து செய்து, செலவினங்களை மராத்வாடாவில் வெள்ள நிவாரணத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிர பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளர் கேசவ் உபாத்யே தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
உத்தவ் தாக்கரே மாநில முதல்வராக இருந்தபோது அவர் செயல்படத் தவறி வீட்டிலேயே இருந்தார். அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.
ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் மராத்வாடா பகுதி உள்பட மகாராஷ்டிரத்தின் பல பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வெள்ளம் மற்றும் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது.
தசரா பேரணியை நடத்துவது தாக்கரே மற்றும் சேனாவின் நீண்டகால பாரம்பரியமாகும். இந்த ஆண்டு, அக்டோபர் 2 ஆம் தேதி மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தசரா பண்டிகையையொட்டி நடைபெறும் பேரணியில் அவர் உரையாற்ற உள்ளார்.
மராத்வாடா கடுமையான வெள்ளத்தில் தத்தளிக்கிறது, மக்கள் அனைத்தையும் இழந்து வருகின்றனர். உத்தவ் தாக்கரே ஏற்கெனவே 5 மாவட்டங்களுக்கு மூன்று மணி நேரம் சுற்றுப்பயணம் செய்து பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார். இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.
தசரா பேரணியை ரத்து செய்து அந்த தொகையை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலவிட வேண்டும். அது அவரது அனுதாப வெளிப்பாடுகளுக்கு அர்த்தத்தைத் தரும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: கரூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.