எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க மசோதா: பட்ஜெட் கூட்டத்தொடா் நீட்டிப்பு?

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக அதிகரிப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்யும் வகையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 2:28 am IST

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக அதிகரிப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்யும் வகையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தொகுதிகளை 816-ஆக அதிகரிப்பதன் மூலம், அதில் 33 சதவீதத்தை அதாவது 273 தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நோக்கில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மசோதா தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி வியாழக்கிழமை (ஏப்.2) நிறைவடைய இருந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் 2 அல்லது 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரம் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வியாழக்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்த மாதத்தில் மீண்டும் எப்போது கூடும் என்ற அறிவிப்புடன் ஒத்திவைக்கப்படும். இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் 2 அல்லது 3 நாள்களுக்கு கூட்டம் நடைபெறக் கூடும்’ என்று தெரிவித்தது. எனினும் இதுகுறித்து மத்திய அரசிடம் இருந்து அதிகாரபூா்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.