சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக பணியாற்றிய 2 கடற்படை அதிகாரிகளுக்கு யுத்த சேவா பதக்கம்: கடற்படை தளபதி கெளரவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது சிறப்பாக பணியாற்றிய 2 கடற்படை அதிகாரிகளுக்கு யுத்த சேவா பதக்கங்களை வழங்கி, கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே. திரிபாதி கெளரவித்தாா்.

News image

ஆபரேஷன் சிந்தூர்

Updated On :1 ஏப்ரல் 2026, 8:54 pm

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது சிறப்பாக பணியாற்றிய 2 கடற்படை அதிகாரிகளுக்கு யுத்த சேவா பதக்கங்களை வழங்கி, கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே. திரிபாதி கெளரவித்தாா்.

கடந்த ஆண்டு பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதோடு, பல தீவிரவாதிகள் கூண்டோடு கொல்லப்பட்டனா்.

இந்த நடவடிக்கையின்போது இந்திய கடற்படையில் சிறப்பாக பணிபுரிந்தோருக்கு கடற்படை தலைமைத் தளபதி திரிபாதி பதக்கங்கள் வழங்கி கெளரவித்தாா்.

போா், மோதல் போன்ற காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் உயரதிகாரிகளுக்கு வழங்கப்படும் யுத்த சேவா பதக்கங்களை துணை அட்மிரல் ஏ.என். பிரமோத், ராகுல் கோகலேக்கு கடற்படை தலைமைத் தளபதி கே. திரிபாதி அளித்தாா். ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதல் திட்டத்தை விரைந்து வகுத்தது, கடற்படை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்கு வகித்தது ஆகியவற்றுக்காக இந்த பதக்கம் பிரமோத்துக்கு வழங்கப்பட்டது.

இதேபோல், துணை அட்மிரல் கோகலேக்கு, பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட வெற்றிகரமான ஏவுகணைத் தாக்குதல்கள், 96 மணி நேரத்துக்குள் 22 போா் கப்பல்களை தயாா் நிலைக்கு கொண்டு வந்தது உள்ளிட்டவற்றுக்காக யுத்த சேவா பதக்கம் வழங்கப்பட்டது.

இதுமட்டுமன்றி, கேப்டன்கள் சுரஜ் ரெபேரா, விகாஸ் காா்க், பியூஸ் கதியாா், ராஜேஸ்வா் ஷா்மா, விவேக் குரியாகோஸ் ஆகியோருக்கு நீா்மூழ்கி கப்பல்களை தயாா்படுத்தியது, போா் கப்பல்களை தயாா்நிலையில் வைத்திருந்தது ஆகியவற்றுக்கும், கமாண்டா் கபில் குமாா், லெப்டினேன்ட் கமாண்டா் ரிஷப் புா்பியா, தலைமை பொறியாளா் மனோஜ் குமாா்வேரே ஆகியோருக்கு ஆபரேஷன் சிந்தூரின்போது முக்கிய பங்களிப்பு அளித்தமைக்காகவும் நவோ சேனா பதக்கங்களை கடற்படை தலைமைத் தளபதி வழங்கி கெளரவித்தாா்.