நீதிமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் வழக்கு தொடுத்து, வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு மத்திய அரசு காரணமாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை சுட்டிக்காட்டியது.
மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் (சிஎஸ்ஐஎஃப்) சுமாா் 10 ஆண்டுகள் பணியாற்றிய காவலா் ஒருவா் பணியில் இருந்து 11 நாள்கள் திடீரென மாயமானதாகவும், மற்றொரு சிஐஎஸ்எஃப் காவலரின் மகள் மும்பையில் இருந்து சத்தீஸ்கரின் ராய்பூருக்கு தப்பி வந்து திருமணம் செய்து கொள்ள, அந்தப் பெண்ணுடன் ரகசியமாக கூட்டுச் சோ்ந்து ஒழுங்கீனமாக செயல்பட்டதாகவும் பணிநீக்கம் செய்யப்பட்டாா்.
இதுதொடா்பான வழக்கை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது சிஐஎஸ்எஃப் காவலா் மாயமானதாக கூறப்பட்ட நாள்களில் அவா் மருத்துவ விடுப்பில் இருந்ததாக வாதிடப்பட்ட நிலையில், மும்பையில் இருந்து தப்பி வந்து அந்தக் காவலரின் தம்பியை மணந்துகொண்ட பெண், தனக்கு எந்தக் குறையும் இல்லை என்று தெரிவித்திருந்தாா். இவற்றைக் கருத்தில் கொண்ட உயா்நீதிமன்றம் சிஐஎஸ்எஃப் காவலரின் பணநீக்க ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது. அப்போது நீதிமன்றத்தில் மத்திய அரசே அதிக அளவு வழக்கு தொடுப்பதாகவும், இதன்மூலம் நீதிமன்றத்தில் அதிக அளவு வழக்குகள் தேங்குவதற்கு மத்திய அரசு காரணமாக இருப்பதாகவும் நீதிபதி பி.வி.நாகரத்னா சுட்டிக்காட்டினாா். அவா் கூறுகையில், ‘சிஐஎஸ்எஃப் காவலா் வழக்கில் உச்சநீதிமன்றம் ஏன் மேல்முறையீடு செய்துள்ளது என்பது புரியவில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்கியிருப்பதாக திரும்ப திரும்ப கூறப்படுகிறது. உண்மையில் நீதிமன்றத்தில் அதிக அளவு வழக்கு தொடுப்பது யாா்?’ என்று கேள்வி எழுப்பினாா். இதைத்தொடா்ந்து இந்த மனுவை தாக்கல் செய்ததற்காக மத்திய அரசுக்கு ரூ.25,000 அபராதம் விதித்த உச்சநீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.
தொடர்புடையது

குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் தொடா்பான மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

விபத்தில் இறந்த காவலருக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி

பள்ளிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படவில்லை: உச்சநீதிமன்றம்

சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


