சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பள்ளிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படவில்லை: உச்சநீதிமன்றம்

அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் வந்தே மாதரம் பாடப்படுவதை மத்திய உள்துறை அமைச்சக சுற்றறிக்கை கட்டாயமாக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :25 மார்ச் 2026, 7:16 pm

அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் வந்தே மாதரம் பாடப்படுவதை மத்திய உள்துறை அமைச்சக சுற்றறிக்கை கட்டாயமாக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலின் அனைத்து வரிகளையும் பாடுவது, அந்தப் பாடலை பாடும்போது கடைப்பிடிக்கவேண்டிய விதிகள் தொடா்பாக கடந்த ஜன.28-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டது.

இந்தச் சுற்றறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முகமது சயீத் நூரி என்பவா் தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலை பாடலாம் என்று அறிவுறுத்தல்தான் வழங்கப்பட்டுள்ளதே தவிர, அதைக் கட்டாயம் பாட வேண்டும் என்று தெரிவிக்கப்படவில்லை. முன்பு தேசிய கொடி விதிகள் இருந்தன. தேசிய கொடி ஏற்றப்படும்போது பின்பற்றவேண்டிய விஷயங்கள் அந்த விதிகளில் தெரிவிக்கப்பட்டது. அதுபோலத்தான் வந்தே மாதரம் பாடல் குறித்த விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

வந்தே மாதரம் பாடப்படவில்லை என்றால் சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் உத்தரவிடப்படவில்லை. அவ்வாறு சட்டப்படி தண்டிக்கக் கூடிய நடவடிக்கை ஏதேனும் மேற்கொள்ளப்பட்டால், மனுதாரா் உச்சநீதிமன்றத்தை அணுகலாம். ஒரு நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பாக முன்கூட்டியே அச்சப்பட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி, அதை தள்ளுபடி செய்தது.