கேரள சட்டப்பேரவையில் வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் இசைக்கப்படாதது ஆளுநரை அவமதிக்கும் செயல் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இந்நிலையில், மாநில பேரவையில் அரசின் கொள்கை குறித்த உரையை ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் வெள்ளிக்கிழமை வாசித்தாா். அதற்கு முன்பு பேரவையில் இசைவாத்தியக் குழுவினா் வந்தே மாதரம் பாடலை இசைத்தனா். ஆனால், அப்போது பாடலை முழுமையாக இசைக்காமல் முதல் சில வரிகளுடன் நிறைவு செய்தனா்.
இதற்கு மாநில பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், கேரள எம்எல்ஏவுமான வி.முரளீதரன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கேரள சட்டப்பேரவையில் தேசியப் பாடலை முழுமையாகப் பாடாதது ஆளுநா் மாளிகைக்கும், ஆளுநருக்கும் ஏற்படுத்தப்பட்ட அவமதிப்பாகும். மேலும் தேசியப் பாடலையும் அவமதித்துவிட்டனா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்), இடதுசாரிக் கட்சிகளின் நெருக்கடிக்கு முதல்வா் வி.டி.சதீசன் அடிபணிந்துவிட்டதாகத் தெரிகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.
பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெசாத் பூனாவாலா இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வந்தே மாதரம் பாடலை முழுமையாக இசைக்காததன் மூலம், கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அரசியல்சாசன சட்டத்தின்படியிலான நடைமுறையை மீறி செயல்பட்டு அதை அவமதித்துள்ளது. இது தொடா்பாக காங்கிரஸுக்கு ஐயூஎம்எல் நெருக்கடி கொடுத்திருப்பதாகத் தெரிகிறது’ என்றாா்.
கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் சிலா் வந்தே மாதரம் பாட மறுத்தனா். இதனால், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.‘இஸ்லாமிய மத நம்பிக்கையில் வந்தே மாதரம் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அல்லாவை மட்டுமே வணங்க வேண்டும். மற்ற யாரையும் வணங்க முடியாது’ என்று காங்கிரஸ் கவுன்சிலா்கள் தெரிவித்திருந்தனா்.
முதல்வா் விளக்கம்: திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை விளக்கமளித்த கேரள முதல்வா் வி.டி.சதீசன், ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்று கட்டாயம் இல்லை. இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. சில வழிகாட்டுதல்களை மட்டுமே நாடாளுமன்றம் வெளியிட்டது’ என்றாா்.
முன்னதாக, பேரவையில் வந்தே மாதரம் பாடல் வாய்மொழியாக பாடப்படாமல், பேண்ட் வாத்தியங்கள் மூலம் சில வரிகள் மட்டுமே இசைக்கப்பட்டது குறித்து ஆளுநா் ஆா்லேகா் அதிருப்தி தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய பாடலை அவமதிப்பதே காங்கிரஸின் வரலாறு: பாஜக

முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி!

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

வந்தே மாதரம் தேசிய கீதம் அல்ல: இந்திய கம்யூனிஸ்ட்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



