சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

மமதா போட்டியிடும் பவானிபூரில் சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல்!

பவானிபூரில் சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல் செய்தது பற்றி...

News image

சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல்

ANI

Updated On :2 ஏப்ரல் 2026, 8:48 am

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கு வங்கத்தில் பவானிபூர் தொகுதியில் மாநில எதிர்க்கட்சித் தலைவர் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி இன்று(ஏப். 2) வேட்புமனு தாக்கல் செய்தார்.

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில், 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப். 6 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(ஏப். 2) தொடங்கி ஏப். 9 வரை நடைபெறுகிறது. ஏப். 10 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஏப். 13 வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம்.

இந்நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தலில் முதல்வர் மமதா பானர்ஜி, சுவேந்து அதிகாரி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.

பவானிபூர் தொகுதியில் போட்டியிட சுவேந்து அதிகாரி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அவர் தனது வேட்புமனுவை வழங்கினார். மமதா ஏப். 8 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

சுவேந்து அதிகாரி ஏற்கெனவே நந்திகிராம் தொகுதியிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

முதல்வர் மமதா பானர்ஜி கடந்த முறை பவானிபூர், நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு நந்திகிராமில் தோல்வியைத் தழுவிய நிலையில், இம்முறை பவானிபூர் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.

Summary

BJP candidate Suvendu Adhikari files nomination in Bhabanipur Assembly constituency for West Bengal elections

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.