மேற்காசிய மோதலால் ஏற்படக்கூடிய எந்தொரு நெருக்கடியையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள கேரளத்தில் நடைபெற்ற சைனிக் சம்மான் சம்மேளனம் நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார்.
இந்தியக் கடற்படைக் கப்பல்கள் நாட்டின் எரிபொருள் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதாகவும், வளைகுடா பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனது ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் சூழலை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். மாநிலத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு மிகவும் பொருத்தமான அரசியல் கட்சி என்றால் அது பாஜக தான், அது மோடியின் உத்தரவாதங்களுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் பாஜகவை ஆதரித்து வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மோடியின் தலைமைத்துவம் 24 காரட் தங்கத்தைப் போன்றது, அது பலமுறை சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
மொத்தம் 140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மே 4ல் வாக்குகள் எண்ணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Defence Minister Rajnath Singh on Thursday said that there is "no dearth of fuel or gas in the country" and India was ready to deal with any energy crisis resulting out of the West Asia conflict.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

3 நாள் பயணமாக ஜெர்மனி செல்லும் ராஜ்நாத் சிங்!

பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்! ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



